16 ம் நூற்றாண்டு துவங்கி 20 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய மன்னாராட்சிகளின் உதவி பெற்ற கடலோடிகள், வட தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா போன்ற கண்டங்களை கைப்பற்ற முனைந்து, வெள்ளை குடியேற்றங்களை ஊக்குவித்து, பெறும்பொருள் திரட்டி இப்படியாக காலனி ஆட்சியை உருவாக்கினார்கள்.
ராபர்ட் கிளைவ் துவங்கி பல பிரிட்டிஷ் திருடர்களின் கனவு பிரதேசமாக இந்தியாவும் இருந்தது. பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து திருடிச் சென்றவற்றை இன்றைய தேதியில் பிரிட்டன் திருப்பித் தர நேர்ந்தால், ஒட்டுமொத்த பிரிட்டன் கஜானாவும் காலி ஆகி திவால் ஆகும். உண்மை இது தான்.
அமெரிக்கோ வெஸ்புகி என்ற இத்தாலியக் கடலோடி, தான் கால்பதித்த நிலப்பரப்பு இந்தியாவாக இருக்கலாம் என்றும், தான் கண்ட செந்நிற பூர்வகுடிகள் சிவப்பு இந்தியர்கள் அல்லது செவ்விந்தியர்கள் என்றும் அழைத்தார்.
இதை நம்பி இந்தியா சென்றால் நிறைய கொள்ளையடிக்கலாம் என்று நிறைய வெள்ளையர்கள் கிளம்பினார்கள். ஆறுமாத கடல் பயணத்தைத் தாங்க முடியாமல் செத்தவர்கள் போக, மீதி பேர் அங்கே செல்ல அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
இது வளமான இந்தியா அல்ல, இது வேறு ஏதோ இடம், வெறும் பாலைவனம் மற்றும் கட்டாந்தரை என்று உணர்ந்து, ஏமாந்து இதைச் சொன்ன அமெரிக்கோவின் பெயரையே அந்த நிலப்பரப்புக்கு ஏளனத்தோடு பெயராக சூட்டினார்கள். பின் அதுவே பெயராக நிலைத்துப்போனது.
அந்த மண்ணின் மைந்தர்களை Indians என்றே அழைத்தார்கள. அது இன்றுவரை தொடர்கிறது. ஒண்ட வந்த தங்களை Native Americans என்று அழைத்துக் கொண்டார்கள். இதுவும் இன்றுவரை தொடர்கிறது.
இன்னுமொரு ஆறுமாத கடல் பயணத்தை விரும்பாத வெள்ளையர்கள், அங்கேயே கிடைத்த நிலங்களை வளைத்து, கால்நடை வளர்க்க ஆரம்பித்தார்கள். குதிரைகளில் சென்று மாடு மேய்த்தவர்கள் Cowboy என அழைக்கப்பட்டார்கள்.
தாங்கள் சுதந்திரமாக அதுவரை திரிந்த நிலம் எல்லாம் இன்று யாரோ வெள்ளையர்கள் வந்து எடுத்துக்கொண்டார்கள் என்று உணர்ந்த செவ்விந்தியர்கள் அவர்களை எதிர்க்கத் துணிந்தார்கள். அவர்களை எதிர்கொள்ள துப்பாக்கி தேவைப்பட்டது. அந்த துப்பாக்கி கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது.
ரத்தத்தை உறைய வைக்கும் செவ்விந்திய இன அழிப்பு, அந்த துயரத்திற்கு சற்றும் குறை இல்லாத ஆப்பிரிக்க கறுப்பின அடிமைகள் இறக்குமதி, இரண்டையும் எதிர்கொள்ள "வெள்ளையர்களே உயர்ந்தவர்கள்" என்ற கொள்கையைக் கொண்ட Ku Klux Klan என்ற இனவாத அமைப்பு எல்லாம் இன்றைய அமெரிக்க வெள்ளை முகத்தின் உள்பக்க கருப்பு முகங்கள்.
அதே பிரிட்டன் தான் ஆஸ்திரேலியாவிலும் அபோரிஜின்களை இன அழிப்பு செய்து குடியேற்றங்களை ஊக்குவித்தது.
இன்று பிரிட்டனும், ஆஸ்திரலியாவும், அமெரிக்காவும் மற்றும் இறுக்கமான குடியேற்றக் கொள்கைகளை உடைய பிற ஐரோப்பிய நாடுகளும் இப்படித்தான் நாடுகளைப் பிடித்தார்கள். குடியேற்றங்களை ஊக்குவித்தார்கள்.
அவர்கள் செய்ததை பிறர் செய்தால் அவர்களை அகதிகள் என்கிறார்கள். Illegal migrants என்கிறார்கள்.
இன்று கை கால் கட்டப்பட்டு, இந்தியா வந்து சேரும் "சட்டவிரோத" குடியேறிகள் போல தான், கருப்பின அடிமைகள் அன்று கொண்டுசெல்லப் பட்டார்கள்.
அமெரிக்கா - மன இறுக்கம் நிறைந்த மனிதர்களின் நாடு. கணக்கற்ற வகையில் அன்றாடம் சுட்டுதள்ளப்பட்டு மரணிக்கும் சக மனிதர்களே அதற்குச் சான்று. படித்த மடையர்கள் இனியாவது அதை உணரட்டும்.
அங்கே கொட்டிக்கிடப்பது வாய்ப்புகள் அல்ல. அபோரிஜின்களின், அப்பாச்சேக்களின், கருப்பின அடிமைகளின் ரத்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக